Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.270 உயர்வு

இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். ஆனால் உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கிடுகிடுவென ஏறி வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக குறைந்தது வருவது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

இன்று பிப்ரவரி 19 ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிரடியாக 270 உயர்ந்து ஒரு கிராம் 14,500க்கு உயர்ந்தது . சென்னையில் நேற்று (பிப். 18) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230க்கும், ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!