தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,360க்கு விற்பனையாகிறது. அத்துடன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையானது கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனையாகிறது.

