வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.மேலும் மழையால் தக்காளிகள் அழுகி போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி வரத்துகுறைவாக காணப்படுகிறது.வழக்கத்துக்கு மாறாக தக்காளி விலை உயர்ந்துள்ளது.
இன்றைக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை 20 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

