Skip to content

திருச்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.திருச்சியிலும் அவ்வபோது மழை பெய்கிறது.
இதனால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு,பாலை பாலக்கரை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது. இந்த இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டு களத்தை இறங்கிய கோட்டை போக்குவரத்து காவலர்கள் தங்கள் வாகனம் மூலம் மணல்களை எடுத்து வந்து சாலைகளில் கொட்டி குண்டும் குழியுமாக இருந்த ரோடுகளை சீரமைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

error: Content is protected !!