Skip to content

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனை பூனை கடித்துள்ளது. பூனைக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டதால் பெரிய புண்ணாக மாறியுள்ளது. ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில், அதன் தாக்கத்தை தாங்க இயலாமல் இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.

பாலமுருகன் (25) என்பவருக்கு ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனி அறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் ரேபிஸ் தாக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!