Skip to content

மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக மதுக்கரை உப்பு பாறையில் உள்ள கல்லுக்குழிக்கு சென்றனர்.
அங்கே சென்றதும் 2 பேர் நீச்சல் தெரியாது என்பதால் கரையிலேயே அமர்ந்து இருந்தனர். சிவசங்கரனும் அவனது நண்பரும், கல்லுக் குழிக்குள் இறங்கி குளித்தனர்.

அப்போது ஆழமான அந்தப் பகுதியில் இருந்த பாறையை தொட்டு விட்டு யார் முதலில் திரும்பி வருவது என்று போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் சிவசங்கரன் தொலைவில் உள்ள பாறையை தொட்டு விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய போது திடீரென்று தண்ணீரில் மூழ்கி விட்டான்.

இதைப் பார்த்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக மதுக்கரை போலீசார் மற்றும் கோவை புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் இரவு வரை சிவசங்கரன் உடலை தேடியும் கிடைக்காததால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று 2 வது நாளாக சிவசங்கரன் உடலை தேடும் பணி நடைபெற்றது. ஆழமான பகுதி என்பதால் உடலை மீட்டிக் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்பொழுது சிறுவன் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

error: Content is protected !!