Skip to content

பாலையூரில் மரக்கன்று நடும் விழா

 புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பாலையூரில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற முனி கோவில் வளாகத்தில் 13 வெவ்வேறு வகையான மரக்கன்றுகள் அரிமளம் பசுமை மீட்புக்குழுவினரால் நடப்பட்டது. பாலையூர் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி  குழுவினரை வரவேற்று நிகழ்வினை தொடங்கி வைத்தார். மரக்கன்றுகள் நடும் விழாவில் அரிமளம் பசுமை மீட்புக்குழு  செயல்தலைவர் எம். குமார், உறுப்பினர்கள் எஸ். ராமமூர்த்தி, எம்.தமிழ்மணி,
எஸ். சுப்பிரமணியன், எம். பாண்டிக்கண்ணன், சி.வெற்றிவேல் ஆகியோர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

error: Content is protected !!