Skip to content

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2
திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை ஏமாற்றிய வழக்கில் இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதி இரண்டை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் ராஜசேகர் ( 29 ) இவரும் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த எட்வின் மகன் அருண்ஜோன்ஸ் (34) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவர் இந்த நிலையில் அருண் ஜோன்ஸ் நண்பரான திருவெறும்பூர் மலைக்கோவில் பிரகாஷ் நகரை சேர்ந்த காந்தி மகன் நந்தா ஹரிஷ் (24) என்பவரும் சேர்ந்து ராஜசேகர் வைத்திருக்கும் காரை மாத வாடகைக்கு எடுத்து இரண்டு மாதம் மட்டும் அவர்களுக்கு மாத வாடகையை கொடுத்துள்ளனர். அதன் பிறகு மாத வாடகையை கொடுக்காமல் ராஜசேகர் காரை அருண் ஜோன்ஸும் நந்தா ஹரிஷும் காரை வேறு ஒருவரிடம் அடமானம் வைத்துள்ளனர்.
காரை கேட்டால் அவர்கள் கொடுக்கவில்லை அதற்கு மாறாக அவர்கள் ராஜசேகருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ராஜசேகர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்ஜோன்ஸ் நந்தா ஹரிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து திருவெறும்பூர் போலீசார் விசாரனை செய்தப் போது இதுபோல் அருண் ஜோன்சும் நந்தா ஹரிஷும் 20க்கும் மேற்பட்டவர்களிடம் ஏமாற்றி காரை மாத வாடகைக்கு எடுத்து வேறு ஒரு இடத்தில் அடமானம் வைத்து ஏமாற்று வேலையில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவது தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேஜிஸ்திரேட் உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!