திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஏர்போட்டில் விமானத்தில் வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் பயணி கொண்டு வந்த இடியாப்பம் மெஷினில் சோதனை செய்தனர். அந்த மிஷினுக்குள் உருளை வடிவ தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். அதன் மதிப்பு 24 காரட் தூய்மையின் உருளை வடிவ தங்கக் கம்பிகள், 811.000 கிராம் எடைக்கொண்டது. இதன் மதிப்பு 44 லட்சத்து 17 ஆயிரத்து 517 ஆகும். மேலும் அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.