திருச்சி அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது….

262
Spread the love

கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால் மதுப்பிரியர்கள் திண்டாடிவருகிறார்கள். இதை பயன்படுத்தி கல்லக்குடி அருகே கல்லகம் கிராமத்தில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் கல்லகத்தில் சோதனை நடத்தினர். அப்போது சிலுவைப்பட்டி-சாத்தப்பாடி சாலையில் உள்ள தோப்பில் 2 பெரிய ஈயப்பானைகள் வைத்து 4 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், ஒரத்தூரை சேர்ந்த மூக்கன்(40), செபஸ்தியார்(29), அன்புராஜ்(33), சுந்தரராஜ் (57) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், 50 லிட்டர் சாராயம், 2 பானைகள் மற்றும் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY