திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ தலைமையில் மதிமுகவினர் வ.உ. சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகள் மாநில துணை பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் பார் உள்ளனர். அதன் பின்னர் நிருபர்களிடம் துரை.வைகோ எம்.பி பேசும் போது,
நீட் தேர்வை பொறுத்தவரை அதில் நிறைய குளறுபடிகள் உள்ளது மொத்தத்தில் நீட் தேர்வை அகற்ற வேண்டும் என்பதுதான் மதிமுகவினுடைய கோரிக்கை. நீட்டில் பல்வேறு புதிய குழப்பங்கள் உருவாகிறது. அனைத்து எதிர்க்கட்சிகள் உடைய கருத்தும் நீட் அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.
வருவாய்த்துறையினரை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே அவர்கள் சில கோரிக்கைகளை வைத்து இருந்தனர். திமுக அது குறித்து சில வாக்குறுதிகளை கொடுத்திருந்தனர். அவர்களால் சில வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட முடியாத சூழ்நிலை, அதற்காக அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் முக்கிய கோரிக்கைகளான ரேஷன் அட்டை, உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மற்றும் சில அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கைகளை பெறுகிற முகமாகத்தான் அதை பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒரே நேரத்தில் நடைபெறும் போது வேலைப்பளு இருக்கத்தான் செய்கிறது. ஏழை மக்களின் நலன் கருதி வருவாய் துறை ஊழியர்கள் அனுசரித்து போக வேண்டும் என்பது என்னுடைய கருத்து. வருவாய்த்துறை ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
செப்டம்பர் 15-ந் தேதி திருச்சி அருகிலுள்ள சிறுகனூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மதிமுக மீண்டும் வந்துவிட்டது என்றும், மறுக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக மதிமுக திகழ்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த மாநாடு இருக்கும் என்றார். அணி திரள்வோம், ஆர்ப்பரிப்போம் அங்கீகாரத்தை பெறுவோம் என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது நீங்கள் வரும் தேர்தலில் அங்கீகாரத்தை பெரும் வகையில் 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்பீர்களா என கேட்ட பொழுது….. அணி திரள்வோம் ஆர்ப்பரிப்போம் அங்கீகாரத்தை பெறுவோம் என்பது எங்களுடைய மாநாட்டு முழக்கம். அங்கீகாரம் என்பது உடனே சீட்டு எண்ணிக்கை என்பதை மனதில் வைத்து நீங்கள் கூறுகிறீர்கள். அது இருந்தாலும்…. எங்களைப் பொறுத்தவரை மதிமுக தமிழகத்தில் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு அரசியல் கட்சி என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாநாட்டை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அந்த எழுச்சியை பார்க்கும் பொழுது எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
இந்த மாநாட்டிற்கு எங்களது கூட்டணி கட்சியினரின் ஆதரவும் நல் ஆசியும் உண்டு. அங்கீகாரம் என்பதற்கு நான் வரையறை கூறினால் அதற்கு ஒரு நாள் பத்தாது என்றார். எங்கள் தலைவர் வைகோவின் தியாகங்கள், சாதனைகள் அதிகம். அங்கீகாரம் என்பது சீட்டு எண்ணிக்கையில் மட்டும் கிடையாது தமிழர்களின் இதயங்களில் தலைவரை கொண்டு வர வேண்டும் என்பதை தான் நாங்கள் அங்கீகாரமாக பார்க்கிறோம். என் டி ஏ கூட்டணியை பொறுத்தவரை திடீரென கட்சிகள் உள்ளே வருகிறது வெளியே செல்கிறது நேற்று முன்தினம் டிடிவி தினகரன் அந்த அணியில் இருந்து விலகி உள்ளார். ஓபிஎஸ் விளங்கியுள்ளார். அந்த கூட்டணியின் இலக்கு என்ன என்பது தெரியவில்லை. எந்த காரணத்திற்காக சேருகிறார்கள் எந்த காரணத்திற்காக வெளியேறுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு தலைவர் டிசம்பரில் அறிவிப்பேன் என்கின்றார் அது கொள்கை அடிப்படையிலான கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.