Skip to content
Home » திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது…
நாங்கள் ஆன்லைன் வணிகம் மற்றும் தெரு சந்தைகள் என பல்வேறு தொழில் நெருக்கடிகளுக்கு இடையே
தொழில் வரி, சேவை வரி, வருமான வரி, உணவு பாதுகாப்பு வரி, கடை ஊழியர்களுக்கான வரி விற்பனை வரி மற்றும் ஜிஎஸ்டி போன்ற பல்வேறு வரிகளை மாநகராட்சிக்கும் அரசாங்கத்திற்கும் செலுத்தி வருகின்றோம். இந்த நிலையில் தொழில் நசிந்து வரும் நிலையில் டி அண்டு ஓ (அச்சுறுத்த தக்கவும் அருவருக்கத்தக்கதுமான). லைசன்ஸ் சூப்பர் மார்க்கெட் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர சில்லரை வணிகங்களுக்கு வருடம் ரூ. 500 என்று மட்டுமே நிர்ணயித்து வசூலிக்க வேண்டுகிறோம். ஆனால் புதிதாக வரி கட்டுபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து டி அண்ட் ஓ வரியும் அபராத வரியும் தொழில் செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களது அதிகாரிகள் சமீப காலமாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
எனவே இந்த பிரச்சனை குறித்து தாங்கள் தலையிட்டு தக்க தீர்வை காண வேண்டும்.
மேலும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கனி வணிகம் செய்யும் வணிகர்கள் மார்க்கெட் மாற்றப்படுமா? இல்லையா? என்று பயந்து கொண்டு தொழில் செய்கின்றனர். இந்த நிலையில் மாநகராட்சியால் காந்தி மார்க்கெட்டில் நிரந்தரக் கடைகளுக்கான உரிமைக்காரரின் பெயர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் தொழில்வரியும் உணவு பாதுகாப்பு துறைக்கான வரியும் டி அண்டு ஓ வரியும் எவ்வாறு எடுப்பது சிரமமாக உள்ளது
எனவே இந்த வரிகளை எங்களின் மேல் சுமத்த வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்த போது மாநில துணைத்தலைவர் சாகுல் ஹமீது,மாநில இணைச்செயலாளர் சபி முகமது,மாவட்ட துணைத் தலைவர்கள் முஸ்தபா ,ரங்கராஜ் ,சிவசாமி ,மாவட்ட பிரதிநிதிகள் குமார், அப்துல்லா ,மோகன் மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!