திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24)
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள்
2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
பிராங்கிலின் மீது போலீஸ்காரரை மிரட்டியதாக கோட்டை போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நாகராஜ் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கறிஞரை பார்ப்பதற்காகவும், பிராங்கிலின் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காகவும் இன்று காலைநீதிமன்றத்திற்கு
வந்தனர்.
திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண். 6
நுழைவு வாயில் பகுதியில் வராண்டாவில் இரண்டு பேரும் வந்தபோது அவர்களுக்கிடையே திடீர் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
இதனைப் பார்த்த நீதிபதி சுப்பிரமணி இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து ஆஜர்ப்படுத்தினர்.
பின்னர் நீதிமன்ற பணியாளர் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
திருச்சி அரியமங்கலம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கணேசன் ( வயது25) லோடுமேன். இவர் கடந்த 28 ஆம் தேதி மாலை அரியமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் மது அருந்த பணம் கேட்டு கட்டையால் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் காமராஜர் முத்துப்பிள்ளை தெருவை சேர்ந்த ரவுடி சசிகுமார் ( வயது32 ) மற்றும் அரியமங்கலம் காந்தி தெருவை
சேர்ந்த நாகேந்திரன் ( வயது29 ) கைது செய்தனர்.
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பெண் மீது வழக்கு
திருச்சி வாசன் வேலி 16 வது கிராஸ் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார்(வயது52 ) இவர் தில்லைநகர் சாஸ்திரி ரோடு அருகே ஒரு ரியல் மார்க்கெட்டிங் நிதி அலுவலகத்தை நடத்தி வருகிறார்.இவரது அலுவலகத்தில் திருவரங்கம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் நிதி அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் அந்த பெண்மணி அக்.9ம் தேதி ரூ.8,11,500 தொகையைத் திருடியதாக கூறப்படுகிறது இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது
காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அக்டோபர் 28ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரை விற்றதாக உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்த முகமது ஸைப்(வயது 28), வரகனேரி சந்தானபுரம் பகுதி சேர்ந்த அசன் அலி (வயது 27 ) ஆகிய இரண்டு ரவுடிகள் மற்றும் மகாலட்சுமிநகரை சேர்ந்த ஹஜிபுதின் (வயது25)ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 190 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

