Skip to content

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து


திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில் சூப்பு கடை நடத்தி வரும் ரவுடி அக்பர் கான் (வயது 43) என்பவர் நடைபாதையில் இடையூறாக அமர்ந்துள்ளார்.
இதைப் பார்த்து ஸ்ரீதர் அவரை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்பர்கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீதர்யிடம் தகராறு செய்தனர். பின்னர் பன்னாடி அவரை பீர் பாட்டிலால் தாக்கினார். இதனால் ஸ்ரீதரர் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி பன்னாடி மற்றும் அவரது மனைவி பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பரிதாபம்

மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை


திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகத்தில் இறங்கினார். இதற்காக ஒரு மெடிக்கல் கடை உரிமையாளர் யிடம் ரூபாய் 2 லட்சம் பணம் கடனாக பெற்றார். இந்நிலையில்
தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ராஜேஷ் குமார் யாரும் எதிர்பாராத வகையில்
உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் உள்ள தமது அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து அவரது மனைவி நீலா உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!