தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் காலை புகை பிடிப்பதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டது. தீ பற்றியது கூட தெரியாமல் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகை மூட்டத்துடன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வீட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட ராஜா நாகேந்திரனை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருடிய பெண் கைது
திருச்சி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் அகமது (வயது28), தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டை பராமரிக்க தன் தோழி உதவிகேட்டு, பொன்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வீட்டில் வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தார். இந்த நிலையில் கடந்த 31ம் தேதி அந்த பெண் வீட்டில் பையில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை திருடிச்சென்றார். இது குறித்து புகாரின் பேரில் செசுன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் பவனந்தம் (வயது40), இவர் நேற்று டிவிஎஸ் டோல்கேட் அருகே பார்சல் வேனை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அங்கு எந்த எச்சரிக்கை பலகை மற்றும் ஒலிப்பான்கள் இன்றி சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின் பகுதி மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த பவனந்தத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் (50) மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வினோத் (வயது25), இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே அதிவேகமாக சென்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்டில்
மலேசியாவில் இருந்து வந்த பயணி கைது…
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது57), இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் மனைவி பெயர், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது. தெரிந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து முருகையனை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.