Skip to content

தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

  • by Authour

சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார் -திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி

சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இன்று முதல் தனது சேவையை தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து ஏர்.இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்து திருச்சி வந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகிய இருவரும் கூட்டாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்

திருச்சியில் நீண்ட நாளாக எதிர்பார்த்த சென்னை மும்பை மற்றும் டெல்லிக்கு எதிர்பார்த்து இன்று சென்னைக்கு முதல் முதலாக கிடைத்துள்ளது பல பேருக்கு இந்த விமான சேவை உதவிகரமாக இருக்கும் டிக்கெட் விலையும் குறைவாக இருக்கிறது, டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் திருச்சிக்கு ரயில் சேவை வழங்க வேண்டும் என பேசி உள்ளதாகவும் அது தொடர்பாக அவர் முயற்சித்து வருவதாகவும் அமைச்சருக்கு கே.என்.நேரு நன்றி தெரிவித்தார்

துரை வைகோ பேசுகையில்…. 37 பன்னாட்டு விமான சேவைகளை செய்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விமான சேவை தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான முதன்மை அதிகாரிகளை சந்தித்து விடுத்த கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது, வருகிற 30-ஆம் தேதி முதல் திருச்சி மும்பை சேவை தொடங்க உள்ளது.

அது மட்டுமன்றி திருச்சியில் இருந்து ஹைதராபாத் ,பெங்களூர் ,கொச்சின் ,கோவா நகரங்களுக்கும் விரைவில் விமான சேவை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்ததாகவும் தெரிவித்தார்.

தொழில்துறை ,சுற்றுலாத்துறை மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் எனவே அனைவரும் சார்பிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். முதல் சேவையில் அமைச்சர் கே.என். நேரு அவர்களும் என்னுடன் சேர்ந்து பயணித்தது பெருமையாக அளிப்பதாக உள்ளது என்றார்.

திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு பகல் நேர ரயில் சேவை குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மற்றும் நாடாளுமன்றத்திலும் திருச்சி பெங்களூர் இன்டர்சிட்டி மற்றும் திருச்சி – திருப்பதி திருச்சி- எர்ணாகுளம் ரயில் சேவை கேட்டும் ரயில்வே அமைச்சரிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதனை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனது முதல் கன்னிப் பேச்சில் காவிரி வைகை குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் 16 மாவட்டங்களுக்கு இது மிகுந்த வரப்பிரசதமாக இருக்கும் என்று கூறியுள்ளேன்.

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும் அது பணிகள் நடைபெற்று வருகிறது மத்திய அரசின் ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் இணைத்தால் மட்டுமே வருடம் தோறும் காவிரி குண்டாறு பகுதியில் தண்ணீர் கிடைக்கும், தமிழக அரசின் நிதி மட்டும் போதாது மத்திய அரசின் பங்களிப்பு வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்..

மலிவு விலை உணவகம் அமைப்பது தொடர்பாக சென்னையில் மனு அளித்துள்ளேன், திருச்சி போன்ற இரண்டாம் கட்ட விமான நிலையங்களுக்கும் பெரு விமான நிலையங்களில் உள்ளது போன்று மலிவு விலை உணவகங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன்.

தனியார் மயம் ஆக்கப்பட்ட பல்வேறு விமான நிலையங்களின் சேவை நன்றாக இருப்பதால் பாதிக்குப் பாதி விரும்புகிறார்கள், 15 வருடமாக நிலுவையில் இருந்த விமான நிலைய கூடுதல விரிவாக்கம் கடந்த எட்டு மாதத்தில் 99 சதவீதம் பணியை நிறைவு செய்துள்ளது. மூன்று ஹெக்டேர் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் பொது நலனுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அதனை தனியாரிடம் ஒப்படைப்பது கூடாது, தனியார் மயத்தை நோக்கி மக்கள் மனநிலையை கொண்டு செல்லும் நிலைக்கு மத்தியஅரசு தள்ளுகிறது, மத்திய அரசு விமான நிலையங்களை நிர்வகிக்கும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் அதை தவிர தனியாருக்கு ஒப்படைப்பது நல்ல அணுகுமுறை அல்ல. வேலையை மற்றும் நடுத்தர பயணிகளே அதிக அளவு திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள், தனியார் மயமாகும் பட்சத்தில் உணவு மற்றும் பல்வேறு கட்டணம் அதிகரிக்கும்.

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக முதலில் ஒரு பஸ் விடப்பட்டு தற்போது பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, அதே நேரம் விமான நிலையத்திற்குள் முதியோர் மற்றும் பலரது வசதிக்காக பேட்டரி கார் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விமான நிலைய நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளேன் என்றார்.

தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வழியாக மதுரை வரையிலான ரயில்வே சேவை வழங்க அப்ரூவ் செய்யப்பட்டு பிங்க் புத்தகத்தில் வந்த நிலையில், தற்போது அந்த புத்தகம் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் அந்ததிட்டம் கேன்சல் ஆகிவிட்டதாகவும் கூறுகிறார்கள், மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர பாடுபட வேண்டியதாக உள்ளது.

பொன்மலை ஜி கார்னர் பிரச்சனை 15 வருடமாக இருந்தது, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆகிவிட்டது, ரயில்வே தனது இடத்தை தானமாக கொடுக்க ஒத்துக்கொண்டு விட்டார்கள், நெடுஞ்சாலைதுறையும் அளவீடு செய்து அப்ரூ குடுத்துவிட்டார்கள், அதே நேரம் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த பணிகளும் இன்னும் சிறிது காலத்தில் தொடங்கி விடும், அதேபோன்று சர்வீஸ் சாலையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டுவர முனைப்பில் உள்ளார், எல்லா மக்கள் விரும்பும் வகையில் சர்வீஸ் ரோடு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்

திடீரென்று சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதியை குறைக்க மாட்டோம் என கூறியிருந்தாலும் தொகுதி எண்ணிக்கை உயர்த்தும்போது, மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை உயர்த்தினால் மற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயரும்பட்சத்தில் நாடாளுமன்றத்தில் நிஜார் கிடைத்தால் சட்டம் அமல்படுத்துவதில் மற்ற மாநிலங்களின் மெஜாரிட்டி கேட்பதில் அவசியம் கிடைக்காது, தமிழகத்தின் நிதிகள் அனைத்தும் வளரும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுடன் நம்முடைய பங்களிப்பு எதிர்காலத்தில் இருக்காது, தமிழக முதல்வர் எடுத்த தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் அரசியலைக் கடந்து மக்களை பாதிக்கின்ற இந்த நிகழ்வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பங்கான 7.2% ஏற்றார்போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சதவீதத்தின் அடிப்படையில் உயர்த்துவாரா அமைச்சர் என கேள்வி எழுப்பினார், மக்கள் சார்ந்த விஷயங்களில் மதிமுக பேசி வருகிறது, இயக்கம் சார்ந்த பணிகளும் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்றி விடக்கூடாது என்ற ஒரே காரணம் அதனால் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம், எட்டாவது ஆண்டாக இந்த கூட்டணியில் தொடர்கிறோம் இந்த கூட்டணி வலுவாக உள்ளது இந்த கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார்

error: Content is protected !!