Skip to content

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த மின்வாரிய  கான்ட்ராக்டர் ஒருவர்  என்னை மிரட்டுகிறார். எனது வங்கி கணக்கிற்கு ஜி – பே மூலம்   ரூ.40 ஆயிரம் அனுப்பிவைத்து. அந்த பணத்தை நான் லஞ்சமாக பெற்றதாக சித்தரிக்க திட்டமிட்டு சதிவேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மின் பணி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!