திருச்சி கூனி பஜார் பீமநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சரோஜா (60) சரோஜா தனது கணவர் இறந்த பிறகு தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 18 ந்தேதி அவரது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் சரோஜா வெளியே வராத காரணத்தால் வீட்டின் அருகில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்த பொழுது சரோஜா மயங்கி நிலையில் கிடந்தார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த சரோஜாவை மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரோஜா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் நளினி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

