திருச்சி மாநகரின் இதய துடிப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை, கார்பன் நியூட்ரல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி என்ஐடிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
மாநில அரசின் “கிளை மேட் ஸ்மார்ட் மார்க் கெட்ஸ்” திட்டத்தின் கீழ், பாரம்பரிய மார்க்கெட்டு களை காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்
டுள்ளது. தினமும் பல்லா யிரக்கணக்கான மக்கள் கூடும் காந்தி மார்க்கெட்டில், தினமும் 25 டன் வரை குப்பைகள் சேர்கிறது. குறுகிய வழித்தடங்கள், அதிக வாகன போக்குவரத்து காரணமாக, காற்று மற்றும் ஒலி மாசும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையை கருத்தில் கொண்டு, காந்தி மார்க் கெட்டின் முழுமையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கையை என்ஐடி தயாரிக்க உள்ளது. நகர்மட்ட ஆய்வு, குப்பை மேலாண்மை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி, மழைநீர் வடிகால் மற்றும் சேகரிப்பு, கட்டடங்களின் பாதுகாப்பு ஆய்வு, போக்குவரத்து மேலாண்மை, காற்று-ஒலி மாசு கண்காணிப்பு, சூரியசக்தி பயன்பாடு உள்ளிட்ட ஆற்றல் மேலாண்மை அம்சங்கள் இதில் இடம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான ஒப்பந் தத்தை, உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திட்ட அறிக்கை சமர்ப்பிக் கப்படும். அதன் பரிந்துரைகள் மாநகராட்சி உள் ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப் புடன் செயல்படுத்தப்ப டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

