Skip to content

7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

 

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9  மாவட்டங்களில், கடந்த 1.3.2027-ம் தேதி முதல் 7.3.23-ம் தேதி வரையிலான 7 நாட்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள ர’வுடிகளின் மீதுள்ள நீதிமன்ற பிடிகட்டளைகளை நிறைவேற்றுதல் சம்பந்தமாக சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மேற்கண்ட  தேடுதல் வேட்டையில் மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1383 நீதிமன்ற பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றில் திருச்சி மாவட்டத்தில் 77 பிடிக்கட்டளைகளும், புதுக்கோட்டையில் 122 பிடிக்கட்டளைகளும், கரூர் மாவட்டத்தில் 48-ம், பெரம்பலூரில் 50 பிடிக்கட்டளைகளும், அரியலூர் மாவட்டத்தில் 266 பிடிக்கட்டளைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 308 பிடிக்கட்டளைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 303 பிடிக்கட்டளைகளும், நாகப்பட்டினத்தில் 37-ம் , மயிலாடுதுறை மாவட்டத்தில் 102 பிடிக்கட்டளைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செக் மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஏதிரிகளின் மீதுள்ள 102 நீதிமன்ற பிடிக்கட்டளைகளும் விடுவிக்கப்பட கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நீதிமன்ற பிடிக்கட்டளைகளும் இச்சிறப்பு தேடுதல் வேட்டையின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சிறப்பு தேடுதல் வேட்டையில் 40 ரடிகளின் மீது இருந்த பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இந்த 7 நாட்களில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொலை, போக்சோ வழக்குள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த தகவலை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!