திருச்சி கருமண்டபத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் புதிதாக ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீபாம்பாலம்மன், ஸ்ரீ ஒண்டிகருப்பு, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு புதிய விக்ரகங்கள் , கோபுரங்கள் பிரதிஷ்டை செய்து புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அருள்மிகு ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிசேகம் நடக்கிறது.
முன்னதாக பிப்ரவரி 9ம் தேதி காலை 8 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ சோடச மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நடக்கிறது.
மாலை 5 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் காலய யாக பூஜைகள் துவங்குகிறது.
10ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகபூஜையும், காலை 6 மணிக்கு இரண்டாம் கால மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும், காலை 6.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது.
7 மணிக்கு விநாயகர் முதல் அனைத்து விமான மற்றும் பரிாவர மூலவர் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம் நடக்கிறது. சிவாச்சாரியார்கள் தஞ்சை சிவஸ்ரீ பாலகுமார சிவம், டி.எஸ். ராஜூ சர்மா, சுந்தர்ராஜ் சர்மா ஆகியோர் கும்பாபிசேகத்தை நடத்துகிறார்கள். 7.15 மணிக்கு மகா தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. 8 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படும்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.