Skip to content

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி புத்தூரில் நடைபெற்று வரும் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவில், வியாழக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையர் நிகழ்விடம் வந்து அதிரடி நடவடிக்கை மூலம் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
திருச்சி புத்தூர் பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா, மார்ச் 4 – ந் தேதி காளியாவட்டத்துடன் தொடங்கியது. மறுநாள் சுத்தபூஜை மற்றும் தேரோட்டம் தொடக்கமும் தொடர்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் முடிவு மற்றும் முக்கிய நிகழ்வான குட்டிகுடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில், தேரோட்டத் தின்போது தேரை இழுப்பதிலும், சப்பரத்தில் சுவாமியை தூக்கிச்செல்வதிலும், குட்டிகுடித்தலின்போது மருளாளியை சுமர்ந்துசெல்வதிலும் வெவ்வேறு பிரிவினர் முன்னிலையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை தேரோட்ட நிகழ்வு நிறைவின்போது புத்தூர் மந்தையில், சுப்பரம் தூக்கிச்செல்வதில் முன்னிலை வகிப்போரும் சேர்ந்து தேரை இழுத்துச்சென்று நிலைநிறுத்தவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஏற்கெனவே தேரை இழுத்துச் செல்வதில் ஈடுபட்டோருக்கும் புதிதாக ஈடுபடுவதாக அறிவித்த தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழலும் நிலவியது. இது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் என். காமினி நிகழ்விடம் விரைந்தார். போலீசாரும் புத்தூர் மந்தையில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காவல் ஆணையர் தலைமையில் இருதரப்பினரிடமும் போலீசார் பேசி, மோதல் ஏற்படும் சூழலை தவிர்க்கச் செய்தனர். போலீஸ் பாதுகாப் புடன் வழக்கமான நடைமுறைகளின்படி தேர் நிலை நிறுத்தப்பட்டது.

error: Content is protected !!