Skip to content

திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

  • by Authour

மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஒளிரும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 10 – ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி – ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தினைத் தொடர்ந்து, நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், திருச்சி மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் வரை சாலை விளக்குகள் அமைக்குமாறு நான் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக, NHAI அதிகாரிகள் முதலில் மார்ச் 2026-க்குள் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.

ஆனால், நான் தொடர்ந்து 06.10.2025 அன்று நினைவூட்டியும், கடிதம் மூலம் வலியுறுத்தியும் இதனை மீண்டும் 13.10.2025 அன்று எனது தலைமையில் நடைபெற்ற DISHA மற்றும் சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் எடுத்துரைத்தேன். அப்போது NHAI அதிகாரிகள் பணிகள் உடனடியாகத் தொடங்கி, டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இன்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன், அந்தப் பணியின் முதல் கட்ட விளக்குகள் அமைக்கும் பணிகள் தற்போது பஞ்சப்பூர் பகுதியில் NHAI மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் வரை விரைவில் முழுமையாக விளக்குகள் ஒளிரும் என நம்புகிறேன்.

இது நமது திருச்சியின் பாதுகாப்பான மற்றும் ஒளிரும் சாலைகளுக்கான இன்னொரு முன்னேற்றமான கட்டமாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!