Skip to content

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ,திமுக முதன்மை செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர்

தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் பகுதி, வட்டம் ,பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு கூறியது..

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்மையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கள நிலவரங்கள் குறித்து விரிவாக என்னிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக கழகம் ஆட்சி அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்றார்.

இதுவரை தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஜெயலலிதா ஆட்சி செய்தார் என பெருமையுடன் அதிமுகவினர் சட்டப்பேரவையில் தெரிவிக்கின்றனர். ஆகையால் இவற்றை முறியடிக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் மீண்டும் திமுக கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் முதல்வராக ஸ்டாலின் அமர வைக்க நாம் அனைவரும் செயல் பட வேண்டும்.

அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி, அதேபோல் புதிய கட்சிகள் தொடங்கி இருப்பவர்கள் கூட்டணியோ அல்லது தனித்து நிற்பார்கள் என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற வேண்டும்.

யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.. திருச்சி மத்திய மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய செயலாளர் மற்றும் பகுதி, வட்டம், பேரூராட்சி ,நகராட்சி செயலாளர்கள், தொடர்ந்து கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கு இடையே பல்வேறு மனக்கசப்புகள் இருக்கலாம். இவை அனைத்திற்கும் நான் நிச்சயம் பதில் கூறுகிறேன். தலைமை கழகத்திலிருந்து சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்களை மாற்ற வேண்டுமென கூறி இருக்கிறார்கள். ஆகையால் நமது மாவட்டத்தில் சரியாக செயல்படாத, செயல்பட முடியாதவர்கள் தானாக முன்வந்து மற்றவர்களை முன்மொழிய வேண்டும் இல்லையென்றால் சரியாக பணியாற்ற வேண்டும். இதையும் மீறினால் சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர் மாற்றப்படுவார்கள் எனக் கூறினார்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஸ்ரீரங்கம்,லால்குடி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என தலைமை கழகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் வருகின்ற தேர்தலில் நாம் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை தொடர்பாகவும் 41 தொகுதி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் வட்டம், பகுதி, பேரூராட்சி, நகராட்சி செயலாளருடன் வரும் 3ஆம் தேதி காலை கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது ,அதில் தெளிவாக நான் அனைவரிடமும் தலைமை கழகம் கூறிய கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளேன் என தெரிவித்தார்.

error: Content is protected !!