திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அட்டாளப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவர் அட்டா ளப்பட்டியில் உள்ள மலைவிழுந்தான் ஏரியில் மண்ணை எவ்வித அரசு அனுமதி இன்றி திருடிக் கொண்டு டிராக்டரில் ஏற்றி அழகப்பட்டி ரோடு திருமுருகன் நகர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வாகன தணிக்கையில் ஈடுபட்ட முசிறி காவல் உதவி ஆய்வாளர் கோகிலா வண்டியை பறிமுதல் செய்து மணல் கடத்திய வரை கைது செய்தார் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
திருச்சி அருகே டிராக்டரில் மண் கடத்தியவர் கைது… வாகனம் பறிமுதல்…
- by Authour

