திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம் உள்ளது.இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஒரு அறையில் இருந்து திடீரென குபுகுபு என புகை வெளியே வந்தது.இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இரண்டு தீயணைப்பு வாகனங்களில் அந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
கண்ணாடிகளை உடைத்து புகையைவெளியேற்றினார்.
பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்த தீ மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தினால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.