Skip to content

திருச்சியில் 15ம் தேதி மின்தடை

  • by Authour


திருச்சி நகரியம் கோட்டம், திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 15.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் இரயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், இராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், M.M. நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், RMS காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!