Skip to content

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானமாகத பொதுமக்கள் தொடர்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை

மனுவை பெற்றுக்கொண்டு இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் வரை மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வண்ணம் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

error: Content is protected !!