திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஒரு வருடமாக திருச்சி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக திருச்சி நீதிபதி விஜயா கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருச்சியில் நடைபெறும் இந்த வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சீமான் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, திருச்சியில் நடைபெறும் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.