திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இளைஞர் இளம் பெண்கள் பாசறை விளையாட்டு வீரர்கள் அணி மாணவர் அணி ஆகிய அமைப்புகளை வலிமையாக்குதல் தகவல் தொழில்நுட்ப அணி செயல்பாடுகள்
திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ் எம்பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மண்டல தகவல் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் சதீஸ், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித் குமார், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பிரியா மற்றும் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் எஸ் கே டி கார்த்திக்
இராவணன், சேது, கண்ணூத்து பொன்னுச்சாமி, அன்பரசன், அருணகிரி, நகர செயலாளர்கள் எஸ் பி பாண்டியன் பவுன் ராமமூர்த்தி, பொன்னி சேகர், பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர்கள் ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், பிச்சை பிள்ளை, சாந்தி, விஜயா, சார்பு அணி செயலாளர்கள் ஜெ. பேரவை ராஜா என்கிற ராஜமணிகண்டன், இளைஞர் அணி, வி டி எம்அருண் நேரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாணவர் அணி அழகர்சாமி, இலக்கிய அணி முருகன், வர்த்தக அணி எத்திராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு காசிராமன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.