திருச்சி பீமநகர்( கோர்ட்டுக்கு அருகில்) இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு வளாகத்தில் எஸ்.பி. சிஐடி போலீஸ் பிரிவுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1 கோடி 23 லட்சம் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி திருச்சியில் உள்ள எஸ்.பி. சிஐடி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திறப்பு விழாவையொட்டி சென்னையிலும், திருச்சியிலும் நடந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.