ஒரு நிமிடத்தில் 72 முறை கால்களுக்கு கீழே சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சி செய்த திருச்சி பள்ளி மாணவி
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசித்துவரும் மோகன் – பிரகதா தம்பதியரின் 17வயது மகள் மோ.பி.சுகித்தா. இவர் தமிழரின் தற்காப்பு கலையான சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் மற்றும் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்ப போட்டிகளில் வெற்றிகளை குவித்துவருகின்றார்.
இதில் அடுத்தகட்டமாக,
இன்று சிலம்பத்தில் சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக நின்ற நிலையில், ஒரு நிமிடத்தில் கால்களுக்கு கீழே 72
முறை சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை முயற்சியானது, பயிற்சிபெற்ற சிலம்பநடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிலம்பமாணவர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை முயற்சியை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மாணவி சுகித்தாவின் தந்தை மோகன் அவர்கள் தெரிவித்தார்கள்.
சாதனை முயற்சி வெற்றிபெற்று மாணவி சுகித்தா திருச்சிக்கு பெருமைகளை சேர்க்கவுள்ள மாணவிக்கு, வரகனேரி என்.கே.ரவிச்சந்திரன், குருச்சரன், கலைக்காவேரி பேராசிரியர் சதீஷ்குமார், மேலகல்கண்டார் கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சர்குணன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.