திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா, இவர் சிறிது காலம் பாஜகவில் பயணித்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி இப்போது எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவரது வீடு திருச்சி வயலூர் சாலை வாசன் வேலியில் உள்ளது.
நேற்றிரவு சூர்யாவின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் பின்பக்க கண்ணாடியின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து உடனடியாக சோமரசம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். டிஎஸ்பியும் வந்து பார்வையிட்டார். தடயவியல் துறையினரும் வந்து கண்ணாடி உடைக்கப்பட்டதை பார்வையிட்டனர்.