திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும் – அந்த வகையில் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் சிவபெருமான் மற்றும் உமையம்மை பல்வேறு வாகனங்களில் எருந்துருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 2 மணி அளவில் துவங்கி நடைபெற்றது – நமச்சிவாயா என்கிற நாமம் முழங்க பக்தர்கள் திருத் தேரை உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
தெற்கு ரத வீதியில் தேர் வந்து கொண்டிருந்தபோது சோலார் லைட்டில் எதிர்பாராத விதமாக தேர் சிக்கியது – சுமார் அரை மணி நேரம் தேரை திசை மாற்றுவதற்கு போராடி வந்த நிலையில் இளைஞர் ஒருவர் அசாத்தியமாக சக்கரத்தில் ஏறி கம்பத்தை வளைத்து பிடித்து நகர்த்தினார் – இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்ட இளைஞருக்கு பாரட்டுக்களை தெரிவித்தனர்.