திருச்சியில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்ததாக மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கி. அன்பு (39). அதே பகுதியை சேர்ந்தவர் கோ. சந்திர பிரகாஷ் (34). இவர் மூவேந்தர் முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட செயலாளராக ஆக உள்ளார். அன்புவிடமிருந்து சந்திரபிரகாஷ் ரூ 5.55 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால் பெற்ற கடனை உரிய காலத்தில் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பலமுறை கேட்டும் இழுத்தடித்து வந்தாரம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் சந்திரபிரகாஷை சந்தித்த அன்பு பணத்தை தேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சந்திரப்பிரகாஷ் தகாத வார்த்தைகளால் அன்பை திட்டியதோடு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறஇத்து அன்பு, துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சந்திரபிரகாஷை கைது செய்தனர்.
