தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் அறிவுறுத்தலின் படி பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க, திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில மாற்றுத் திறனாளிகள் அணி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல், மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் மூலிகை மோர், பானாக்கம், தர்பூசணி, இளநீர் போன்றவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
