Skip to content

டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்க அதிபர்களில் இதுவரை தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய 4பேர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து ஹென்றி கிஸ்ஸிங்கரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். வியட்நாம் போரை நிறுத்த இவர் மேற்கொண்ட முயற்சிக்காக இது வழங்கப்பட்டது.  இதுபோல ரூஸ்வெல்ட்டுக்கும்  போர் நிறுத்தத்திற்காகவே வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரம் மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்கான  அசாதாரண முயற்சிகளுக்காக ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல்  பரிசு வழங்கப்பட்டது.

தற்போது, அமெரிக்க அதிபர்  டிரம்ப்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு மீது தீராத  ஆசை…. தீராத வெறியே ஏற்பட்டு விட்டது.  எப்படியும் நோபல்  பரிசு வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் பாகிஸ்தான் உள்பட சில நாடுகளை சேர்ந்தவர்களை உசுப்பி விட்டு,  டிரம்ப்க்கும் நோபல் பரிசு வழங்க வேண்டும் என  பேச வைத்தார்.

எங்கு போர் நடந்தாலும், அதை தானே நிறுத்தியதாக  முந்திரிக்கொட்டை போல அறிக்கை விட்டு பார்த்தார். ஆனால் இவரது திட்டம் எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது. எதற்காக  போரை நான் தான் நிறுத்தினேன் என கூறுகிறார் என்று  உலகமே இன்று டிரம்பை பார்த்து  சிரிப்பாய் சிரிக்கிறது.  நானும் ரவுடி தான் என்று வடிவேலு கூறியது போல இப்போது  டிரம்ப் கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவரை கண்டு கொள்ள யாரும் இல்லை. ‘அடையமுடியா பொருளின் மீது ஆசை தீராது’ என்பது இப்போது  டிரம்புக்கு  பொருத்தமானதாக அமைந்து உள்ளது.

வடிவேலு ரவுடி இல்லை என்பதை அறிந்த போலீசார் அவரை ஜீப்பில் ஏற்ற மாட்டார்கள். ஆனாலும் வடிவேலு ஓடிப்போய் ஜீப்பில் ஏறிக்கொள்வார். அதே போன்று  டிரம்பும்,  அமைதிக்கான நோபல் பரிசு போல ஒரு மெடல் செய்து தனக்கு தானே மாட்டிக்கொண்டாலும்ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது நிலைமை போய்விட்டது.

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையான  வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட்,  என்பவரும் நேற்று  டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூவத் தொடங்கி விட்டார்.

உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக்  அவர் கூறினார். டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில்இந்தியா, பாகிஸ்தான் போர் உள்பட 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்.   அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நோபல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். என்ன நடக்கிறது என்று அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

 

error: Content is protected !!