ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார். அதே நேரத்தில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து எண்ணெய் வாங்கும்படி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். டிரம்பின் இந்த மிரட்டல்களுக்கு நேற்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத் தராது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்”
இதைத்தொடர்ந்து டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம், ‘50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.