Skip to content

பிரஸ்மீட்டில் டிரம்ப் முரட்டு தூக்கம்..

  • by Authour

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது கண்களை மூடி சற்று அசந்து போனது போல் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியின்போது, 79 வயதான டிரம்ப் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி லேசாக தூங்கியது கேமராவில் பதிவாகியது.

இதை “லேசா அசந்த நேரம்” என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம், இதைப் பயன்படுத்தி டிரம்புக்கு “The Nodfather” (தூக்க தந்தை) என்ற புதிய பட்டப்பெயர் சூட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் டிரம்ப் தூங்கிய 6 புகைப்படங்களை “The Godfather” போஸ்டரைப் போல வடிவமைத்து பகிர்ந்தார். “பார்த்தேன், பகிர வேண்டும் போலிருந்தது” என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார். முன்பு “Dozy Don” (தூக்க டான்) என்றும் நியூசம் டிரம்பை அழைத்திருந்தார்.வெள்ளை மாளிகை இதை மறுத்து, “அதிபர் தூங்கவில்லை. நிகழ்ச்சி முழுக்க பேசினார், பல கேள்விகளுக்கு பதிலளித்தார்” என்று விளக்கம் அளித்தது.

ஆனால் வீடியோ காட்சிகள் டிரம்ப் கண்களை மூடி அசைவதைத் தெளிவாகக் காட்டின. இது டிரம்பின் உடல்நலம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப காரணமாக அமைந்தது.டிரம்ப் ரசிகர்கள் இதை “கண் இருந்தா எல்லாரும் தூங்கத்தான் போவாங்க” என்று டிரோல் செய்து திசை திருப்பினர். முன்பு ஜோ பைடனை “Sleepy Joe” என்று கிண்டலடித்த டிரம்புக்கு இப்போது திருப்பி அடி கிடைத்துள்ளது. பைடன் ஆட்சியில் இருந்த நீரா டாண்டன், “பைடன் இப்படி தூங்கியிருந்தால் மீடியா பைத்தியமாகியிருக்கும்” என்று கிண்டலடித்தார்.

இது டிரம்புக்கு முதல் முறை அல்ல. ஜூலை மாத எரிசக்தி நிகழ்ச்சி, செப்டம்பர் யு.எஸ். ஓபன், கடந்த ஆண்டு ஹஷ் மணி வழக்கு விசாரணை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் டிரம்ப் தூங்கியது போல் காட்சிகள் வெளியாகியுள்ளன. அவரது நிர்வாக அதிகாரிகள் “டிரம்ப் எப்போது தூங்குகிறார் என்றே தெரியாது, எப்போதும் வேலை செய்கிறார்” என்று புகழ்ந்தாலும், இந்த காட்சிகள் வேறு கதை சொல்கின்றன.இந்த வைரல் காட்சிகள் அமெரிக்க அரசியலில் புதிய சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் உடல்நலம் மற்றும் வயது குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

error: Content is protected !!