ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது. ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமியும் தாக்கியது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த தகவலை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) தெரிவித்தது.
ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.