Skip to content

தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

 

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாக தகவல்.

மேலும் இவ்வழக்கில் உள்ள முக்கிய நபர்களை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறை மும்மரம் காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!