Skip to content

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே வீதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் சந்திரன் மகன் லோகேஷ் (22),குமரேசன் மகன் கிரி (21),லட்சுமிதாஸ் மகன் விக்கி (21)ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லணை சுற்றி பார்க்க வந்தனர். இதில் பிரசாத் மற்றும் லோகேஷ் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனராம். எதிர்பாராமல் இருவரும் மூழ்கி மாயமானார்கள். அருகில் இருந்த இளைஞர்கள் இருவரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து புகாரின் பேரில் தோகூர் போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்திற்கு சென்று இரு சடலங்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!