Skip to content

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு.. 

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (20) இவர் நேற்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று விட்டு அவரது சொந்த ஊரான மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சி -மதுரை பைபாஸ் சாலையில் நிறுத்தி உள்ளார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தை வந்த இரண்டு மர்ம நபர்கள் பட்டா கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலை பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வீட்டு உரிமையாளரை தாக்கிய தம்பதி… 

திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (41). இவருக்கு செங்குளம் காலனியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த கார்த்தி (32) என்பவருக்கு அந்த வீட்டினை 3 வருடத்திற்கு மாத வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திக் கடந்த ஆறு மாதமாக வாடகை பாக்கி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதுரை வீட்டிற்கு சென்று வாடகை பாக்கி கேட்டு உள்ளார் அப்பொழுது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக் தங்கதுரையை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக் (32) மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி (30 )ஆகிய இருவரை கைது செய்தனர்.மேலும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து காந்தி மார்க்கெட் வியாபாரி சாவு

திருச்சி வரகனேரி பெரியார் நகரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் ( 63). இவர் காந்தி மார்க்கெட்டில் கொத்தமல்லி, மிளகாய் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் மே. 4 – ந் தேதி இரவு பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் பழத்த மழை பெய்தது.அப்போது கொளஞ்சியப்பனின் வீட்டின் அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டின் சுவற்றின் மேல் விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கொளஞ்சியப்பன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொளஞ்சியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,கொளஞ்சியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

error: Content is protected !!