ஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். வரும் 14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். கூலி படத்திற்கு சென்சார் நிறுவனம் ஏ சான்று வழங்கி உள்ளது. இதற்கு முன் ரஜினியின் நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, நான் சிகப்பு மனிதன், சிவா ஆகிய 5 படங்களுக்கு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்போது 6வதாக கூலிப்படம் ஏ சான்று பெற்றுள்ளது.