“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில்
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் கீழ் உள்ள மாவட்ட நிலை அலுவலர்களுடன் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் நான்காம் புதன்கிழமை ஒரு தாலுகா தேர்வு செய்யப்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்திட தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளைய தினம் (31.01.2024) அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில் மட்டும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்துகொண்டு அவர்கள் சார்ந்த துறை அலுவலகங்களிலும் களஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன் தொடர்ச்சியாக அலுவலர்களின் களஆய்வு குறித்த ஆய்வுக்கூட்டம் உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவுள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
உடையார்பாளையம் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை தொடக்கம்
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”
திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில்