சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில், பெண்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். கோடை வெயிலின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின் சார்பில், பேரவை தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு நிழற்குடை வழங்கும் விழா நடைபெற்றது, இவ்விழாவில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் மற்றும் நிறுவனர்.இரா. அன்பழகன், பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் A. தாஜுதீன், பொதுச் செயலாளர் நாக்ஸ் பெர்னாண்டோ, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிழற்குடைகளை வழங்கினார்.
குடைகளை பெற்றுக்கொண்ட பெண்களுக்கு மீனவர் பேரவை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
