Skip to content

கரூர் குளித்தலையில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் ரயில்வே கேட் மேற்கு பகுதியில் இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அந்த பெண் ஆடு மேய்ப்பதற்காக வந்து அமர்ந்து உள்ளார் என நினைத்தோம். அதற்குப் பின்னர் அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்து அந்தப் பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இளம் பெண் இந்த பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதை உறுதி செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!