திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் (27) என்பது தெரியவந்தது.
அவர் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீரக்குமாரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 60 கிராம் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

