Skip to content

உபியில் நடந்த திருமணம்: போதையில் மணமகளுக்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்த மாப்பிள்ளை

உத்தரப் பிரதேச மாநிலம் கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்  fகடந்த 22ம் தேதி  ஒரு திருமணம் நடந்தது.  பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தார். அப்போது மணமகன், குடிபோதையில் தள்ளாடியபடியே மணமேடைக்கு வந்தார். அப்போதே மணமகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து, குடிபோதையில் இருந்த அந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, தள்ளாடியபடியே பக்கத்தில் இருந்த அவரது நண்பருக்கு மாலை அணிவித்தார்.  இதனால் திருமண வீட்டில் தகராறு ஏற்பட்டது. இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என மணமகள் கூறிவிட்டார்.

அதுமட்டுமன்றி, மணமகள் நேரடியாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணமகளின் புகாரின் பேரில்,மணமகனின் குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை  துன்புறுத்தல்  பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் கியோல்டியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!