Skip to content

உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 15ம் தேதி, 16 வயது சிறுமியின் சகோதரரை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான குற்றவாளியை பிடித்து தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்து அவரைத் தேடி வந்தனர். போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க ஆக்ரா, லக்னோ மற்றும் குவாலியர் என இடங்களை மாற்றிக்கொண்டே இருந்த ராம் பரோசி, சில நேரங்களில் உயர் அதிகாரி போலவும், விளையாட்டு வீரர் போலவும் மாறுவேடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் இவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் முகத்தை மறைக்கவும் வகையில் ‘பர்தா’ ஆடை அணிந்து சென்ற ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

சோதனையில் அவர் ‘பெண் வேடமிட்டு உதட்டில் லிப்ஸ்டிக் மற்றும் பர்தா’ அணிந்து தப்பிக்க முயன்ற ராம் பரோசி என்பது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!